புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தும் நோக்கியாவின் நோக்கம் சூடுபிடித்திருக்கிறதென்று தாராளமாகக் கூறலாம். புதிய, புதிய மொபைல்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் வித்தியாசமான தொழில் நுட்ப வசதியினைக் கொடுக்க முனைந்துள்ளது நோக்கியா நிறுவனம்.
கார் டிரைவர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் வசதிகள் கொண்ட சாப்ட்வேரை தனது நோக்கியா மொபைல்களில் அறிமுகம் செய்ய உள்ளது நோக்கியா. இந்த அப்பிளிக்கேஷன் டிராப்பிக் அப்டேட் வசதி கொண்டது. இதனால் எந்தெந்த இடத்தில் டிராஃபிக் அதிகமாக உள்ளது என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும்.
இந்த வசதி நிச்சயம் கார் டிரைவர்களுக்கும், கார் ஓனர்களுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு கார் டிரைவர்களுக்கென்றே பிரத்தியேகமான முறையில் பாடல்கள் கேட்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இனிமையான பாடல்களைக் கேட்க முடியும். இதன் சத்தம் அதிரவைக்கும் வகையில் இருக்காது.
நோக்கியாவின் 600, 700, 701 மற்றும் என்-9 போன்ற புதிய மொபைல்கள் இந்த வசதிகளுடன் வெளிவர உள்ளது.
நோக்கியா-701 ரூ.20,000 விலையிலும், நோக்கியா 600 ரூ.12,000 விலையிலும், நோக்கியா-700 ரூ.18,000 விலையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment