கூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா?

அது என்ன  2-step verification அதை எப்படி பயன்படுத்துவது 

இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு புதிய கணினியில் இருந்து கூகிள் கணக்கை பயன்படுத்தினால் ஒரு கோட் ஆனது அலைபேசி க்கு குறுஞ்செய்தி ஆக அனுப்படும் அதை கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

இதனை செயல்படுத்த முதலில் உங்கள் ஜிமெயில் ஓபன் செய்து அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் SIGNING IN பகுதியில் 2-step verification என்பதை கிளிக் செய்யவும் .






வரும் விண்டோவில் START SETUP கிளிக் செய்யவும் 


அடுத்து வரும் விண்டோவில் Set up your phone COUNTRY கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து TEXT MESSAGE கிளிக் செய்து SENT CODE கிளிக் செய்யவும் 


இப்பொது உங்கள் மொபைல் எண்ணிற்கு கூகுள் இடம் இருந்து VERIFICATION CODE வந்து விடும் அந்த CODE னை வரும் விண்டோவில் கொடுத்து VERIFY கிளிக் செய்ய வேண்டும் 


அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் வீட்டில் அல்லது மொபைலில் உபயோகம் செய்யப்படுவதாக இருந்தால் TRUST THIS COMPUTER கிளிக் செய்து NEXT கொடுக்கவும் 



கடைசியில் கிளிக் CONFIRM செய்யவும்



வரும் விண்டோவில் நீங்கள் பார்க்கலாம் 2 STEP VERIFICATION IS : ON என்று காணப்படும் 


அவ்ளோ தான் 

இனி உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டினை  நீங்கள் ஓபன் செய்தாலும் அல்லது வேற யாராவது ஓபன் செய்ய நினைத்தாலும் உங்கள் மொபைல் எண்ணிற்கு கூகுள் இடம் இருந்து VERIFICATION CODE வந்து விடும் அதை கொடுத்தால் மட்டுமே உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டினை ஓபன் செய்ய முடியும் 

நண்பர்களே இதை செய்து விட்டு நீங்கள் வேற ஒரு BROWSER இல் இருந்து உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டினை ஓபன் செய்து பாருங்கள் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து SIGN IN கொடுத்தால் உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு கூகுள் இடம் இருந்து VERIFICATION CODE வந்து விடும் அதை கொடுத்து VERIFY செய்தால் மட்டுமே உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டினை ஓபன் செய்ய முடியும்.



இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்து உங்கள் ஜிமெயில் ஐடி , நண்பர்களின் ஜிமெயில் ஐடி மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவர்களின் ஜிமெயில் ஐடியையும் பாதுகாத்து கொள்ளுங்கள் ...

நன்றி நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம் அடுத்த போஸ்டில் ...




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top