ஸ்மார்ட் போன்களில் இருந்து நமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் WhatsApp-ஐ பயன்படுத்துகிறோம்.

நம் அனைவருக்குமே தெரியும் WhatsApp-ன் சிறப்பம்சங்கள். நமது பயனர்களுக்காக WhatsApp ஆனது பல்வேறு வசதிகளை தினம் தோறும் தந்து கொண்டு இருக்கிறது.

ஸ்மார்ட் போனை நாம் கையில் எடுத்தால் WhatsApp-ல் நாம் செலவிடும் நேரமே அதிகம் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த WhatsApp ஆனது நம் அனைவரையும் தன்பக்கம் கவர்ந்திளுத்துள்ளது. அதனால் இன்றைய பதிவில் WhatsApp உடன் சம்மந்தப்பட்ட ஒரு மென்பொருளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.



WhatsApp-ல் எமது நண்பர்களிடம் நாம் Chat செய்யும் போது Smiley-களை அனுப்புவதற்கான வசதியை WhatsApp ஏற்கனவே நமக்கு தந்துள்ளது.
இதற்கு ஒரு படி மேலே சென்று அழகான, வித்தியாசமான Font-களை WhatsApp மூலம் உங்களது நண்பர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள Android மற்றும் iPhone-களுக்கான சில மென்பொருள் நமக்கு உதவுகிறது.

நீங்கள் Android பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

நீங்கள் iPhone பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை உபயோகித்து எப்படி உங்களது நண்பர்களுக்கு WhatsApp மூலம் வித்தியாசமான குறும் செய்திகளை அனுப்பது என்று பார்ப்போம்.

டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்து வரும் விண்டோவில் மேல பாண்ட்ஸ் என்று இருக்கும்அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பான்ட்களையும் ஸ்டைல்களையும் தேர்வு செய்து டைப் கொள்ள முடியும்.





அடுத்து அதே விண்டோவில் கீழே WhatsApp ஐகான்-ஐ கிளிக் செய்தால் உங்களது WhatsApp கணக்கு திறக்கப்படும்


இப்போது உங்களது நண்பர்களை தேர்வு செய்து நீங்கள் அழகாக டைப் செய்த குறும் செய்தியை அனுப்பலாம்.

இந்த வசதியை பயன்படுத்தி உங்களது நண்பர்களை விசேட செய்திகளை அழகான முறையில் அனுப்பலாம். அதாவது அவர்களுடைய பிறந்தநாள் அல்லது வேறு எதாவது சிறப்பு நாட்களில் இவ்வாறு அழகிய முறையில் செய்திகளை அனுப்பி அவர்களை ஆச்சிரியப்படுத்தலாம்.



Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top