வாட்ஸ்ஆப் செயலியில் தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
முதலில் போனின் இன்டர்னெல் மெமரி அல்லது SD Card சென்று Whatsapp > Databases ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
டேட்டாபேசஸ் ஃபோல்டரில் msgstore-2014-01-04.1.db.crypt. என்ற பெயரில் பல்வேறு ஃபைல்களை காண முடியும். இதோடு அவைகளில் என்று உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட தேதியும் காணப்படும், கூடவே msgstore.db.crypt என்ற ஃபைல் தெரியும். அது தான் முக்கியமான ஃபைல் ஆகும்.
அடுத்து ஃபைலின் பெயரை மாற்றியமைக்க வேண்டும், அதாவாது msgstore.db.crypt என்ற ஃபைலை backup-msgstore.db.crypt என்ற பெயருக்கு மாற்ற வேண்டும்.
மீண்டும் msgstore.db.crypt ஃபைலின் பெயரை மாற்ற வேண்டும். இதற்கு Setting > Applications > manage applications > Whatsapp, சென்று Clear Data என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.
இனி msgstore.db.crypt ஃபைல் ரீஸ்டோர் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்தால் பேக்கப் ஃபோல்டரில் இருந்து குறுந்தகவல்களை ரீஸ்டோர் செய்யும் ஆப்ஷன் உங்களது திரையில் தெரியும். இங்கு ரீஸ்டோர் பட்டனை க்ளிக் செய்தால் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு விடும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.