"WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்).

இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.

WiFi Hotspots என்றால் என்ன?

WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi ஹாட்ஸ்பாட்டாக(access point) இருக்கும்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?

1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)

2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.

3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.

5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்(router setup instructions) ஒரு நகல்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?

1. இணையத்துடன் இணைக்கவும்

2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.

3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.

4. வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கலாம் 

5.இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்துகொள்ளலாம்.




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top