ரிலையன்ஸ் ஜியோ சிம்மை தொடர்ந்து பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன் அதிரடி ஆபர் 249க்கு 300 ஜிபி பிஎஸ்என்எல் சலுகை.
ரிலையன்சின் ஜியோ நிறுவனம் 4 ஜி சலுகைகளுடன் 50க்கு 1 கிகா பைட் (ஜிபி) டேட்டாவை வழங்க உள்ளது. இதன் அறிமுக சலுகையாக டிசம்பர் 31 வரை ஜியோ சிம் பயன்படுத்தும் அனைவரும் அனைத்து சேவையையும் இலவசமாக பெறும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் லேண்டலைன் தொலைபேசியில் 249 பிளான் அறிமுகப்படுத்திஉள்ளது.
அதன்படி ஒரு மாதம் முழுவதும் 300 ஜிபி டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, ஒரு ஜிபிக்கான கட்டணம் ஒரு ரூபாய்க்கும் குறைவு. இந்த புதிய திட்டம் வரும் 9ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 2 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவை வழங்கப்படுகிறது. இதை பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
மேலும் விவரமாக தெரிய கீழே உள்ள லிங்கில் செல்லவும் :
0 comments:
Post a Comment