பேஸ்புக் பதிவில் தோன்றும் புதிய விருப்பங்களை நேற்று முதல் பேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.
லைக் பட்டன் மேல் மவுஸை எடுத்துச் சென்றாலோ அல்லது மொபைலில் லைக் பட்டன் மீது டச் பண்ணினாலோ இந்த விருப்பங்கள் தோன்றும்.
அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான பேஸ்புக்கில், லைக் பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ், ஹா ஹா, வாவ், ஸாட், ஆங்க்ரி என கூடுதலாக 5 விருப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக்கில் நண்பர்கள் பகிரும் பதிவுகளுக்கும், படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னூட்டம் இடும் வசதியும், விரும்பும் (லைக்) வசதியும் இதுவரை இருந்துவந்தது. நீண்ட காலமாக, பிடிக்காத பதிவுகளுக்கு அன்லைக் (விரும்பவில்லை) என்ற பட்டனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த வேண்டும் என பல பயனர்கள் கோரி வருகின்றனர்.
தற்போது இதற்கு மாற்றாக, லைக் பட்டனோடு சேர்த்து இன்னும் 5 தேர்வுகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் குறியீடுகளாக தம்ஸ் அப் வடிவம், இதய வடிவம், வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலி, ஆச்சரியமாகப் பார்க்கும் ஸ்மைலி, சோகமான ஸ்மைலி மற்றும் கோபமான ஸ்மைலி ஆகியவை தரப்பட்டுள்ளன. இப்போது மொத்தம் 6 அம்சங்கள் இப்போது.
வழக்கமாக இருக்கும் லைக் பட்டன் மேல் மவுஸை எடுத்துச் சென்றாலோ அல்லது மொபைலில் லைக் பட்டன் மீது டச் பண்ணினாலோ இந்த விருப்பங்கள் தோன்றும், வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய அம்சத்துக்கு பேஸ்புக் பயனர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
உங்களுக்கு இந்த தகவல் பிடித்துருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ..
0 comments:
Post a Comment