உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் வியாபராங்களில் ஒன்று தான் மொபைல் போன் வியாபாரம். மொபைல் போன் என்றால் முன்பு நாம் பயன்படுத்திய நோக்கியா போன் மட்டும் கிடையாது. அன்றை மொபைல் போன்கள் அழைப்பு, குறுந்தகவல், மற்றும் ஒரே ஒரு கேம் மட்டுமே கொண்டிருந்தன.
இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது, இன்றைய ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் நமது பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வழி செய்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்து மொபைல் போன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் விரிவாக இங்கு தொகுத்திருக்கின்றோம்.
ஃபிளெக்சிபில் கான்செப்ட் போன்
இது முற்றிலும் வளையும் திறன் கொண்ட ஓஎல்இடி திரை கொண்ட கான்செப்ட் போன். பார்க்க பணம் வைக்கும் பர்ஸ் போன்றே காட்சியளிக்கின்றது.
பிக்கோலோ கான்செப்ட் போன்
பெண்களை கவரும் விதமாக இந்த கான்செப்ட் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கான்செப்ட் போன்
ஸ்லைடிங் டச் திரை மற்ரும் க்வர்டி கீபோர்டு இந்த கருவியில் 4.3 எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
டிராவெல்லர் கான்செப்ட் போன்
ஆன்ட்ரியூ செங் வடிவமைத்த இந்த கருவியில் கீபோர்டு மற்றும் தொடு திரை வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி கையில் இருந்து எளிதாக நழுவாத படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்டியூட் போன்
எடீ ஜோ வடிவமைத்த இந்த கான்செப்ட் கருவியில் 5 எம்பி ப்ரைமரி கேமரா, புகைப்படங்களை நேரடியாக பதிவேற்றம் செய்யும் மென்பொருள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவி கையில் வைத்திருந்தால் எவ்வித வெளிச்சத்தையும் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும்.
தி கம்பாலா இயர்போன்
இந்த மொபைல் போன் இயர் போனாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பிரதியேக வடிவமைப்பு மற்றும் ஃபிளக்ஸி திரை மற்றும் பல்வேறு சென்சார்கள் கொண்டிருக்கின்றது.
ஃப்ளட்டர் கான்செப்ட் போன்
வளையும் திறன் கொண்ட ஓஎல்இடி திரை கொண்ட இந்த கருவி எதிர்கால திரைப்படங்களில் காண முடியும்.
நனோக்கியா
மேக் ஃபுனாமிசு வடிவமைத்த இந்த கருவியில் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
மொபைல் ஸ்க்ரிப்ட்
சிறிய தொடு திரை கொண்ட இந்த கருவியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த கருவி தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும்.
0 comments:
Post a Comment