டிஜிட்டல் ஸ்க்ரீன்களுக்கு முன்னால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் வரை செலவு செய்யும் போது கண்களுக்கு ஏற்படும் சிரமம் ஆனது உடல்ரீதியான வசதியின்மையை உண்டாக்கும், அதைத்தான் 'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்' (Digital Eye Strain) என்கிறார்கள்..! 

Qt3kVSj.jpg

டெஸ்க்டாப், லாப்டாப், டேப்ளெட், ஸ்மார்ட்போன் என எல்லாமுமே டிஜிட்டல் திரைகள் தான். அதற்காக அவைகளையெல்லாம் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. அதே சமயம் 'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்'தனை தவிர்க்கும் வாய்ப்பும் மிக குறைவு தான். அப்போது என்ன செய்யலாம்..??

'டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்' ஏற்படும் போது அதை உடனடியாக சரிசெய்து கொள்ளும்படியான 5 டிப்ஸ்களை தான், கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். கண்கள் 'ரொம்ப ரொம்ப' முக்கியம், பத்திரமா பாத்துக்கோங்க..! 

ZPBzqyj.jpg

டிப்ஸ் 01 : 

கம்ப்யூட்டர் ஐவேர் அல்லது கிளாசஸ்களை அணிந்து கொள்ளலாம். 

RMQCsO6.jpg

பார்வை மேம்பாடு : 

அதாவது உங்கள் கண்களுக்கு ஏற்றமுறையில், பாதிக்கக்கூடிய நீள நிறத்தை தடுத்து பார்வையை மேம்படுத்தும் கண்கண்ணாடிகளை பயன் படுத்தலாம்.

5W4gthx.jpg

டிப்ஸ் 02 :

கண்களுக்கும் பார்வைக்கும் மிகவும் உதவும் 20 - 20 - 20 விதியை நடைமுறைப்படுத்தலாம். 

9uNNmoA.jpg

20 நொடி : 

அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு இடையிலும், 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். 

Q99b5uW.jpg

டிப்ஸ் 03 : 

ஒளிவழிக்கு உகந்தவாறு வேலை செய்யும் இடத்தை அமைத்துக்கொள்ளுதல். 

brg9xTd.jpg

குறைவான ஒளி :

எடுத்துக்காட்டுக்கு தலைக்கு மேல் இருக்கும் மின்விளக்கின் ஒளி குறைவாக இருப்பின் கண்கள் கூசுவதை தவிர்க்கலாம். 

vFTIN37.jpg

டிப்ஸ் 04 : 

கருவிகளுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஹை-ஃபைவ் டிஸ்டன்ஸ். 

8Vup9TR.jpg

சரியான நிலை : 

அதாவது, மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஆனது நெருக்கமான பார்வையிலோ அல்லது மிக தொலைவான பார்வையிலோ இல்லாமல் சரியான நிலையில் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளுதல். 

0UnUYNI.jpg

டிப்ஸ் 05 : 

ஸ்க்ரீன் டெக்ஸ்ட் ஸைஸ்'தனை அதிகரித்தல். 

fGs5AhK.jpg

உள்ளடக்கம் :

ஸ்க்ரீனின் உள்ளடக்கம் நம் கண்களுக்கு தெளிவாக இருக்கும்படியான, பொதுவான ஒரு டெக்ஸ்ட் சைஸ் வைத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top