உங்கள் கணனி இன்னும் மந்த கதியில் தான் இயங்குகின்றதா?

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது இந்த  இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளானது ஒரு Windows கணனியின் வேகமான செயற்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் தருகின்றது.




  • எமது கணனியை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது கணனியில் தேங்கும் தேவையற்ற கோப்புக்கள், தற்காலிக கோப்புக்கள், மற்றும் இணைய உலாவிகளில் தேங்கும் Browser cache, Browser cookies, Browser history போன்ற வற்றினை இனங்கண்டு நீக்குவதன் மூலம் குறிப்பிட்ட கணனியின் வேகமான செயற்பாட்டுக்கு உதவுகின்றது.
  • அது மட்டுமல்லாது இந்த மென்பொருளை பயன்படுத்தி கணனியில் இருக்கக் கூடிய உங்கள் தனிப்பட்ட கோப்புக்களை மீளவும் மீட்டெடுக்க முடியாத வகையில் அவற்றினை எமது வன்தட்டில் இருந்து நீக்கிக் கொள்ளவும் முடிகிறது.
  • மேலும் கணனி துவங்கும் போது அதனுடன் இணைந்தாற்போல் சில மென்பொருள்கள் துவங்குவதால் கணனியின் வேகம் குறைகின்றது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் Start Up Manager எனும் வசதியை இந்த மென்பொருள் தருகின்றது. இதன் மூலம் கணனி துவங்கும் போது துவங்கக் கூடிய தேவையற்ற மென்பொருள்களை இனங்கண்டு அவற்றின் செயற்பாட்டினை முடக்கிக்கொள்ள முடியும்.
        எமது கணனியில் நிருவப்பட்டிருக்கக் கூடிய மென்பொருள்களை நீக்கிக்            கொள்ள நாம் Control Panel இல் இருக்கக் கூடிய Add/Remove Program ஐ                    பயன்படுத்துவோம் அல்லாவா?

         இதனை பயன்படுத்தி மென்பொருள்களை நீக்கும் போது சில                                  மென்பொருள்களின் கோப்புக்கள் நீக்கப்படாமல் எமது வன்தட்டில்                      தேங்குவதுடன் Registry இலும் குறைபாடுகள் காணப்படும்.

  • எனவே இது போன்ற குறைபாடுகளை நீக்கி குறிப்பிட்ட மென்பொருளை முற்றாக நீக்கிக் கொள்ளும் வகையில் இந்த மென்பொருளில் Uninstaller எனும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மென்பொருள்களை முற்றாக நீக்கிக் கொள்ள முடியும்.
  • மேலும்இந்த மென்பொருளின் முகப்புப் பக்கத்தில் Scan, Quick Scan, Clean & Restart, Clean & Shutdown போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது. இதில் Scan என்பதைஒருமுறை சுட்டுவதன் மூலம் எமது கணனியில் இருக்கக் கூடிய அத்தனை குறைபாடுகளும் ஆழமாக அறியப்பட்டு நீக்கப் படுகின்றது.
  • மேலும் இதில் உள்ள Quick Scan என்பதனை சுட்டுவதன் மூலம் கணனியில் காணப்படக்கூடிய முக்கிமான குறைபாடுகளை மாத்திரம் மிக வேகமாக கண்டறிந்து நீக்கிக் கொள்ள முடிகிறது.
  • அத்துடன் Clean & Restart, Clean & Shutdown என்பவைகள் மூலம் எமது கணனியிலுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்ட பின் கணணியை தானாகவே Shutdown அல்லது Restart செய்து கொள்ளவும் முடியும்.
  • இவைகள் தவிர கணணி துவங்கும் போதே எமது கணனியில் இருக்கக் கூடிய குறைபாடுகளை தானாக கணடறிந்து நீக்கும் படி அமைத்துக் கொள்ளவதற்கான வசதியை இம்மென்பொருள் கொண்டுள்ளதுடன் இன்னும் பல வசதிகளையும் இது தருகின்றது.

சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியுமான இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top