Virus (வைரஸ்):

கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் 
கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே
பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம்கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.

ControlPanel (கண்ட்ரோல்பேனல்):


விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.

Taskbar (டாஸ்க்பார்):

விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம். 

Driver (ட்ரைவர்):  

விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும்.

HardDisk (ஹார்ட்டிஸ்க்): 

பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது. 

Registry (ரெஜிஸ்ட்ரி):

விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.

USB - Universal Serial Bus (யுனிவர்சல் சீரியல் பஸ்): 
கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.

MotherBoard (மதர்போர்ட்):

பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு. இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. 

Bandwidth:

இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.

Client: 

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top