கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் , பேஸ்புக் கலரை மாற்றுங்கள் என்று இரு லிங் அனைத்து கமெண்ட்டிலும் பரவலாக காணப்பட்டது . இது பயனாளர்களின் பாஸ்வேர்டை திருட பயன்படுத்தப் படும் வைரஸ் என்று பிரபல இணையதளம் அறிவித்துள்ளது. இந்த் வைரஸ் இதுவரை 10,000 த்துக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாக்கி உள்ளது .

இந்த வைரஸ் முதலில் பேஸ்புக் தளத்தால் நீக்கப்பட்டது . ஆனால் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது . நீங்கள் கணினியில் இந்த லிங்கை அழுத்தினால் , கலரை மாற்ற வீடியோ ஒன்று ஓடத் தொடங்கும் . அந்த வீடியோ பார்க்கும் நேரத்தில் உங்கள் பாஸ்வேர்ட் செய்யப்பட்டு விடும் . உங்களின் நண்பர்கள் பட்டியலும் அவர்களுக்கு கிடைத்து விடும் . நீங்கள் வீடியோவை பார்க்காமல் சென்றால் உங்களை ஒரு அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்திட வலியுறுத்தும் . அதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் .

நீங்கள் அண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் , " உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது , அதை கிளின் செய்ய இந்த அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யுங்கள் " என்று வந்தால் அதுவும் வைரஸ் தான் .

தப்பிக்க என்ன வழி ??

இது போன்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள் . மேலும் உங்கள் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள் .





Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top