ஆன்டிராய்டு கருவிகளை தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஐஓஎஸ் கருவிகளுக்கும் புதிய செயளியை வெளியிட்டுள்ளது. இந்த செயளி மூலம் வாடிக்கையாளர்கள் கணினியை ஐபோன் அல்லது ஐபேட் மூலம் பயன்படுத்த முடியும்.
க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் என்றழைக்கப்படும் இந்த செயளியின் ஐஓஎஸ் பதிப்பு மூலம் கணினியை ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் மூலம் இயக்க முடியும். மேலும் இந்த செயளி உங்கள் நண்பர்களும் சிறிது நேரம் கணினியை பயன்படுத்தும் வசதியை கொடுக்கின்றது.
இதை பயன்படுத்த, முதலில் கணினியில் ரிமோட் அக்சஸ் பதிவு செய்ய வேண்டும், இதன் பின் ஐஓஎஸ் கருவியில், செயளியை ஓபன் செய்து இணைக்கப்பட்ட கணினியை இயக்க முடியும். இந்த செயளி ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment