இணையம் என்பது மிகப் பெரிய பரந்து விரிந்த கடலைப் போன்றது. அதில் நீங்கள் பயணிக்க வேண்டுமானால், இணையத்திற்கு நீங்கள் பரிச்சயமாக வேண்டுமானால் நிச்சயம் சர்ச் என்ஜினை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 

இணையத்தில் கிடைக்கும் சர்ச் என்ஜினில் முதன்மையானது கூகுள் சர்ச் என்ஜின். உலகத்தில் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் கூகிள் சர்ச் என்ஜினைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

காரணம் கூகிளுக்கு நிகர் கூகிள். அது தரும் பல்வேறு வசதிகளுடன், உடனடித் தகவல்களைத் திரட்டித்தரும் வேகமும் அபரிதமானது. மேலும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி கூகிள் எர்ச் என்ஜினை விரிவாக்கிக்கொண்டே உள்ளனர். அதில் உள்ள தொழில்நுட்பத்தைக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் செய்துகொண்டே உள்ளனர். 



அவ்வாறான கூகிள் சர்ச் என்ஜின் தளமானது நமக்கு கூடுதலான வசதிகளையும் தருகிறது. குறிப்பிட்ட துறைத் தொடர்பாக மட்டுமே தேடுவதற்கான தேடியந்திர வசதியையும் நமக்கு கொடுக்கிறது. அவ்வாறான வசதிகளுடன் கூடிய தளங்களையும் பார்ப்போம். 


உங்களுக்கு உடனடி  செய்திகள் வேண்டுமெனில், நீங்கள் இந்த தளத்தை நாடலாம். இதில் உலகத்தில் உள்ள பல்வேறு செய்திகளைத் தொகுத்துத் தரும் தளமாக உள்ளது. 


உலகத்திலேயே மிகச் சிறந்த படங்களை தேடும் தேடிந்தியந்திர வசதி இது. உங்களுக்குத் தேவையான சரியான படங்களை தேடிப்பெற்றுக்கொள்ளும் வசதியை இது அளிக்கிறது. 
கூகிள் டாட் காம் /ஷாப்பிங்.

இந்த தளத்தின் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். கூகிள் ஷாப்பிங் தளத்தின் மூலம் நீங்கள் வாங்க கூடிய பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு, வாங்கலாம். 


ஸ்டாக் மார்க்கெட் பற்றிய விரைவான கண்ணோட்டதை அறிய இத்தளம் உதவும். 


இதன் மூலம் சேட்டிலைட் போட்டோ, உங்களுக்குத் தேவையான வரைபடங்களை காண முடியும். 


இத்தளத்தின் மூலம் உங்களுக்குத் தேவையான கல்வி வீடியோக்களை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும். 


சில வருடங்களுக்கும் முன்பு கூகிள் இத்தளத்தை வாங்கிக்கொண்டது. மில்லியன் கணக்கான வீடியோக்களைப் பெற்றுள்ளது. தற்பொழுது வீடியோவின் மூலம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளையும் பயனர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 


கல்வியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்தளம் பயன்படுகிறது கல்வியியலுக்குத் தேவையான  ஆவணங்களை இத்தளத்தின் மூலம் தேடிப் பெற்றுக்கொள்ள முடியும். 


இலக்கிய புத்தகங்களை இதன் மூலம் கண்டறிய முடியும். உங்களுக்குத் தேவையான அற்புதமான இலக்கியத்தரமிக்க புத்தகங்களை ஒரு சில பக்கங்களை வாசிக்க முடிவதோடு, தேவையெனில் அவற்றை நீங்கள் விலைக்கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும். இலக்கியத் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இத்தளம் நிச்சயம் உதவும். 







Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top