Photoshop மூலம் எமது புகைப்படங்களை எமக்குத் தேவையான விதத்தில் மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்தாலும் Photoshop இல் அவ்வளவு பரீட்சயம் இல்லாதவர்களுக்கு உதவ ஏராளமான மென்பொருள்கள் உள்ளது.

அந்த வகையில் உங்களுக்குத்தேவையான விதத்தில் உங்கள் புகைப்படங்களை மாற்றி அமைத்துக்கொள்ள Photoscape எனும் மென்பொருளை எமது முன்னைய பதிவுகளில் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

இருப்பினும் எவ்வித சிரமும் இன்றி குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தில் தரப்பட்டுள்ள நிறங்களை வெவ்வேறு நிறங்களுக்கு மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகின்றது Colour Surprise எனும் இலவச மென்பொருள்.


கணினி  பற்றி தெரியாதவர்கள் கூட இந்த பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளில் நீங்கள் நிறத்தினை மாற்ற விரும்பும் புகைப்படத்தினை தெரிவு செய்த பின் Randomize என்பதனை சுட்ட வேண்டும். இனி நீங்கள் இதனை சுட்டும் ஒவ்வொரு தடவையும் நீங்கள் உள்ளிட்ட புகைப்படம் வெவேறு நிறங்களுக்கு மாற்றப்படுவதை அவதானிக்கலாம்.

அவற்றுள் உங்களுக்குப் பிடித்தவைகளை கணினியில் சேமித்துக்கொள்ளவும் முடியும் மேலும் Print, Zoom In, Zoom Out வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது.


முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியுமான இதனை நீங்களும் உங்கள் கணனிக்கு தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top