Start பட்டன் அழுத்தி Search என்பதில் கிளிக் செய்தி்டவும். கிடைக்கும் பாக்ஸில் What do you want to search for ? என்று கொடுக்கப்பட்டு்ள்ள பிரிவில் For File or Folders என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
இங்கே Search by any or all of the criteria below என்று காட்டப்பட்டு பல பிரிவுகள் கீழே தரப்படும்.

1. உங்களுக்கு அந்த பைலின் பெயர் தெரியாது. ஆனால் என்ன வகை பைல் என்று தெரியும். அது *.doc, Excel *.xls, Acrobat *.pdf, *.ppt மற்றும் *.exe என என்னவாக வேண்டுமானாலும். இருக்கலாம். பைலை முதல் பிரிவில் தரவும்.

2. பெயரும் தெரியவில்லை ; என்ன வகையில் சேவ் செய்தோம் எனவும் தெரியவில்லை. அது *.doc அல்லது *.txt என்பது மறந்துவிட்டது. ஆனால் பைலில் உள்ள ஒரு வாசகம் ஞாபகத்தில் தேடலாம். இதனை இரண்டாவது பிரிவில் தந்து தேடலாம்.

3. மேற்காணும் வகையில் உள்ள பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு குறிப்பிட்ட டிரைவில் தான் உள்ளது. என நீங்கள் உறுதியாக நம்பினால் அந்த டிரைவை மட்டும் கொடுத்து தேடலாம். இதனை Look IN : என்ற பிரிவில் டிரைவ் எழுத்தைத் தந்து தேடலாம். எழுத்தைக் டைப் செய்வதற்குப் பதிலாக அதில் உள்ள சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்தால் வரிசையாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்தும் தேடலாம்.

4. இதே வரிசையில் மேலும் சில தேடல் வகைகளை இங்கு பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் அதனை பயன்படுத்தி இருப்பது நினைவில் இருந்தால் அந்த தேதியைக் கொடுத்தும் தேடலாம்

இப்படி பல வகைகளில் தேடினால் நிச்சயம் ஒரு வகையில் நமக்கு பைல் கிடைக்கும்.



Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top