டீம் வியூவர் என்பது ஒரு கணினியிலிருந்து இருந்தாவாறே வேறொரு இடத்தில் இருக்கும் கணினியை இணையத்தின் மூலம் ரீமோட் முறையில் இயக்கப் பயன்படும் மென்பொருளாகும்.உங்களுடைய நண்பரின் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணியை அல்லது சந்தேகத்தை தீர்த்து வைக்க நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே ரிமோட் முறையில் இணையத்தின் மூலம் அணுகலாம்.. அதற்குப் பயன்படும் மென்பொருள்தான் டீம்வியூவர்..

Windows, Mac கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் இம்மென்பொருள் ஏற்கனவே கிடைக்கிறது. மேலும் Android, iPhone, iPad ஸ்மார்ட்போன்களுக்கான டீம்வியூவர் மென்பொருள்களையும் வெளியிட்டுள்ளது டீம் வியூவர்.





1. கீழை கொடுத்துள்ள  முகவரிக்கு சென்று டீம் வியூவரை டவுண்லோட் செய்யவும்

2. செட்டப் பைலை திறந்ததும் இன்ஸ்டோல் அல்லது ரன் என இரண்டு ஆப்ஸன்கள் காட்டப்படும் இதில் இன்ஸ்டோல் என்பதை செலெக்ட் செய்து Next தட்டுங்கள்.

3. அடுத்துவரும் விண்டோவில் personal / non commercial use என்பதை தேர்வு செய்து Next தட்டுங்கள்

4. அடுத்து ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதும் வரும் விண்டோவில் Normal Installation Deafault என்பதை தேர்வு செய்யவும்.

5. அடுத்து Full access என்பதை தேர்வு செய்து Next தட்டியதும் மென்பொருள் நிறுவப்பட்டுவிடும். 

6. நண்பரின் கணனியை அக்ஸஸ் செய்ய மேற்சொன்ன படிமுறைகளை பின்பற்றி அவர் கணனியிலும் டீம் வியூவரை நிறுவி இருக்க வேண்டும். இந்த கட்டுரையின் லிங்க்கை கொடுத்து நிறுவ சொல்லி அறுவுறுத்துங்கள்


7. டீம் வியூவரை நிறுவிய பின்னர் அதன் வலது பக்கத்தில் தானகவே இலக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேட் காட்டப்படும். நண்பரிடம் அவற்றை வாங்கி குறித்துக்கொள்ளுங்கள். மற்றும் அவரை டீம் வியூவர் மென்பொருளை திறந்து வைத்திருக்க சொல்லுங்கள்.

8. பின்னர் உங்கள் கணனியில் டீம் வியூவரை திறந்து அதில் வல்ப்பக்கதில் remote access என்பதை தேர்வு செய்து Id என்ற இடத்தில் நண்பரிடம் வாங்கிய Id ஐ கொடுத்து Connect ஐ தட்டுங்கள். கனெக்சன் செட் செய்யப்பட்டு சற்று நேரத்தில் பாஸ்வேட் கேட்கப்படும் அதில் பாஸ்வேட்டை கொடுத்ததும். இணைய வேகத்தை பொறுத்து சற்று நேரத்தில் நண்பரின் கணனியின் டெஸ்க்டாப் அப்படியே உங்கள் கணனியில் வந்திவிடும்.


9. நீங்கள் பயன்படுத்தி முடிக்கும் வரைக்கும் நண்பரை அமைதியாக மவுஸை தொடாமல் இருக்க சொல்லுங்கள் ஏனெனில் இருவரும் ஒரே நேரத்தில் ஒரு கணனியை பயன்படுத்த முடியாது.

இதன் மூலம் இலகுவாக இன்னுமொரு கணனியின் பிரச்சனைகளை சரி செய்து விடலாம்






லிங்க் :












Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top