ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் செய்வதற்கு புதிய வயர்லஸ் சார்ஜர் கண்டுடிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தியை வயர்லஸ் முறையில் அனுப்புவதற்கு பல்வேறு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2007 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி. என அழைக்கப்படும், உலகின் முன்னணி பொறியியல் ஆய்வு மையமான Massachusetts Institute of Technology (MIT) இந்த வகையில் முதல் ஆய்வினை மேற்கொண்டது.


பின்னர், பல பல்கலைக் கழகங்கள் இதனைத் தொடர்ந்தன. இவர்களில், கொரியன் ஆய்வு மையம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.








கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த Korean Advanced Institute of Science and Technology(KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் "Dipole Coil Resonant System” (DCRS) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.


இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் சக்தியை ஏற்றுக் கொள்ளும் சாதனத்தில் உள்ள காயில்களுக்கும் இடையே செயல்பட்டது.

இனி, வீடுகளில் WiFi வழி INTERNET (இணைய இணைப்பு) பயன்படுத்துவது போல, வயர் இணைப்பு இன்றி, ஒரே நேரத்தில் பல மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர்.

வயர் இணைப்பு எதுவும் இன்றி, மின்சக்தியைக் கடத்தும் ஆய்வு தற்போது பல பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 











Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top