நீங்களும் உங்களிடம் இருக்கும் இசைகள், பாடல்கள்,
வீடியோ கோப்புக்கள் போன்றவற்றினை
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றினை இன்னுமொன்றுடன் இணைத்தும்
அவைகளின் சுருதியையும் தொனியையும் மாற்றுவதன் மூலமும் சாதாரணமான ஒரு பாடலை அட்டகாசமானதாக மாற்றிக்கொள்ள விரும்புகின்றீர்களா?
அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது VirtualDJ எனும் இந்த இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் இசைகள், பாடல்கள்,வீடியோ
கோப்புக்கள் போன்றவற்றினை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கொள்ளவும் வேறு
பிரித்துக்கொள்ளவும் முடியும்.
குறிப்பிட்ட ஒரு பாடலின் ஒரு பகுதியை பிரித்து இன்னுமொரு பாடலுடன் இணைக்கவும், குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு புதியதொரு பின்னணி இசையை வழங்கவும்,
குறிப்பிட்ட ஒரு பாடலின் தொனியை மாற்றவும் என பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உதவுகின்றது. அத்துடன் பாடலில் இருந்து இசையை
வேறுபிரித்துக் கொள்ளவும் முடியும்.
மேலும் உங்கள் குரல் பதிவுகளை இந்த மென்பொருள் மூலமாகவே பாடல்களுடன்
சேர்க்கவும் அதன் தொனியை மாற்றி அமைத்துக்கொள்ளவும் முடியும்.
அத்துடன் உங்கள் வீடியோ கோப்புக்களுக்கு பின்னணி இசைகளை வழங்கவும்
அவற்றுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இவைகள் தவிர இன்னும் பல ஏராளமான வசதிகளையும்
அட்டகாசமான தோற்றத்தையும் கொண்டுள்ளது முயற்சித்து பாருங்கள் . இந்த
இலவச மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
இந்த மென்பொருளின் அளவு = 60 MB
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய :
password : computertricks4pc
0 comments:
Post a Comment