இந்த இணையதளம் மூலம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.


முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.



அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.



அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா., அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.



நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.



இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்குரியவர்.



இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்



இணையதள முகவரி:








Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top