செல்போன் என்பது நமக்கு
வலது கை போலாகிவிட்டது. ஒரு நாள் கூட நமது செல்போனை விட்டு தனியாக பிரிந்திருக்க
முடியாது. அப்படி இருக்கும் செல்போன், ஒரு நாள் தொலைந்து போனால், என்ன செய்வது இந்த சிறப்பு அறிக்கையை படியுங்கள்.
செல்போன் தொலைந்த
பின் அழுவதை விட, தொலைவதற்கு
முன் செய்ய வேண்டியவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
IMEI என்று சொல்லபடும்
சர்வதேச நகர்பேசி அடையாள எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள்
தொலைபேசியில் *#06# என்று
டயல் செய்தால் 15 இலக்க
எண் கிடைக்கும். இந்த எண்ணை பத்திரமாக எங்காவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில்
உங்கள் செல்போன் தொலைந்து போனால் இந்த எண்ணை வைத்து உங்கள் செல்போனை
கண்டுபிடிக்கலாம்.
தொலைந்து போனது
சாதாரண வகை செல்போனாக இருந்தால், நீங்கள்
ஏற்கனவே சேமித்து
வைத்திருக்கும் IMEI யை
காவல் நிலையத்தில் கொடுத்து கண்டுபிடிக்கலாம். அதுவே தொலைந்தது
ஸ்மார்ட் போனாக இருந்தால், சில
மொபைல் அப்ளிகேஷன்களை
போன் தொலைவதற்கு முன்னமே நிறுவி வைத்திருப்பதன் மூலம் உங்கள்
போன் இருப்பிடத்தை
கண்டறியலாம்.
காணமல் போன செல்போனை
கண்டுபிடிக்க ஏராளமான மொபைல் அப்ளிகேஷன்கள் இருந்தாலும், குறிப்பிட தகுந்த அப்ளிகேஷன்களை இங்கே
தொகுத்துள்ளேன்.
வியர் இஸ் மை
டிராய்டு:
இது ஒரு இலவச
அப்ளிகேஷன். காணமல் போன செல்போனுக்கு மெசேஜ் மூலம் கட்டளைகளை அனுப்பி, போனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கலாம்.
உங்கள் தகவல்கள் அடுத்தவர் கையில் சிக்காமல் இருப்பதற்கு மெசேஜ் மூலம்
கட்டளைகளை கொடுத்து தகவல்களை அழிக்கலாம்.
செர்பெருஸ்:
இது ஒரு கட்டண
அப்ளிகேஷன். முதல் ஒரு வாரம் இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷனில் தொலைந்த செல்போனை
கண்டுபிடிப்பதற்கு பல வசதிகள் தரப்பட்டுள்ளதால் இதை
அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.
இந்த செர்பெருஸ் அப்ளிகேஷன்
இயங்க இணைய இணைப்பு அவசியம் இல்லை. வேறு மொபைலில் இருந்து குறுந்தகவல் அளித்து
அதன் மூலம் போனில்
உள்ள பல சேவைகளை நீங்கள் தொடங்கமுடியும். குறிப்பாக போனில் உள்ள தகவல்களை
அழிக்கலாம். கடவுச்சொல்லை மாற்றலாம், கடைசியாக வந்த அழைப்புகளின் விபரங்களை பெறலாம்.
போன்
லோகேடர்:
செர்பெருஸ்
அப்ளிகேஷனில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது. கூடுதலாக இது உங்களுக்கு புகைப்படங்கள்
எடுத்து அனுப்பி வைக்கும். யாராவது உங்கள் செல்போனுக்குள் அத்துமீறி நுழைய
முற்பட்டால் தன்னிச்சையாக கேமரா இயங்கி புகைப்படங்கள் எடுக்க
தொடங்கிவிடும். இதுவும் கட்டண அப்ளிகேஷன் தான். விலை ரூபாய்.200 .
ஒரு வேளை உங்கள்
செல்போன் தொலைவதற்கு முன், நீங்கள்
மேலே சொல்லபட்ட எந்தவகை எந்த அப்ளிகேஷனையும் பயன்படுத்தவிட்டால், என்ன செய்வது?. இதற்க்கு துணைபுரிகிறது பிளான் B .
பிளான் B:
இந்த அப்ளிகேஷனை
உங்கள் போன் தொலைந்த பின்னரும் நிறுவமுடியும். இதற்க்கு தொலைந்த உங்கள் போனில் இணைய இணைப்பு
இருக்க வேண்டியது அவசியம். கூகிள் ப்ளே ஸ்டோருக்கு சென்று அங்கிருந்து
நேரடியாக உங்கள் தொலைந்த மொபைலில் நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவி
முடித்ததும் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் கொடுக்கபடும் கூகிள் மேப் லிங்கை
கிளிக் செய்தால், உங்கள்
செல்போன் இருப்பிடத்தை
கண்டுபிடிக்கலாம். அதன் பின்னர், அவ்வபோது
உங்கள் போன் இருப்பிடம்
பற்றி மின்னஞ்சல் அனுப்பிகொண்டு இருக்கும். இந்த தகவலை வைத்து காவல்
துறையை நாடினால் போனை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இந்த அப்ளிகேஷன்களை
தவிர பிட் டிபன்டர், சோனி
செல்போனில் மட்டும் பிரத்தியோமாக இருக்கும் சோனி மை எக்ஸ்பீரியா, கூகிள் ஆன்டுராய்டு டிவைஸ் மேனேஜர்
போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: நண்பர்கள்
என்னிடம் cop@vsnl.net சேவையை
பற்றி அடிக்கடி கேட்கின்றனர். அந்த சேவை தற்சமயம் கைவிடபட்டதாக கேள்விபட்டேன்.
0 comments:
Post a Comment