பேஸ்புக் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர் இறந்த பின்னர், அவரின் அக்கவுண்ட்டிற்கு என்ன நேரிடுகிறது? 

பொதுவாக, இறந்தவரின் குடும்பத்தினர், அவரின் பேஸ்புக் அக்கவுண்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த புகைப்படங்கள், தெரிவித்த தகவல்கள் என அனைத்தும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கவே விரும்புவார்கள்.

பேஸ்புக், அக்கவுண்ட் ஒன்றை, அதற்கானவரின் மரணத்திற்குப் பின்னால், நினைவாக வைத்திருக்க வழி தருகிறது. இதனை memorialized அக்கவுண்ட் என அழைக்கிறது.இந்த வகை அக்கவுண்ட் வழக்கமான அக்கவுண்ட் போஸ்டிங்கிலிருந்து வேறுபட்டது. 

இந்த அக்கவுண்ட்டில் யாரும் லாக் இன் செய்திட முடியாது. புதியதாக எந்த ஒரு நண்பரின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த அக்கவுண்ட்டில், அதனை உருவாக்கியவரின் தனிப்பட்ட செட்டிங்ஸ் பாதுகாக்கப்படும். 

எனவே, இறந்தவரின் அக்கவுண்ட்டிற்கு, அவருடைய நண்பர்கள், டைம்லைனில், தகவல்களைப் பதியலாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அதில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பிரைவேட் மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். 

இறந்தவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அப்படியே வைக்கப்படும். நண்பர்கள் அவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம். போட்டோக்கள், ஸ்டேட்ட்ஸ் அப்டேட் தகவல்கள், லிங்க்ஸ், வீடியோஸ் இன்னும் பிற நண்பர்களின் பார்வைக்கு எப்போதும் கிடைக்கும். 

இருப்பினும், நண்பர்களுக்கு சிறப்பு நிகழ்விற்கான நினைவுக் குறிப்புகள் கிடைக்காது. நீங்கள் அறிந்த நண்பர்கள் என்ற பட்டியலில், இறந்தவரின் பெயர் இருக்காது. 

அக்கவுண்ட் ஒன்றை நினைவக அக்கவுண்ட்டாக அமைக்க,https://www.facebook.com/help/contact/305593649477238 என்ற முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை, இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் நிரப்பி அனுப்பவும்.

இதில் கேட்டுள்ள இறப்பு சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டியதிருக்கும். இல்லை எனில், நம் மக்கள் உயிரோடு இருக்கிறவர்களின் நெருங்கிய உறவினர் என பொய்யாக, விண்ணப்பத்தினை அனுப்பிவிடுவார்கள் இல்லையா!

Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top