பேஸ்புக் இணையதளத்தில் நண்பர்களை கண்டறிய Search வசதியை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறோம். கூகுளை போலவே பேஸ்புக்கும் நம்முடைய தேடல்களை சேமிக்கின்றது. அந்த தேடல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவது எப்படி என்று இங்கு காண்போம்.

பேஸ்புக் தேடல் விவரங்களை அழிப்பது எப்படி:

  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்கள் பெயர் மீது கிளிக் செய்து உங்களின் டைம்லைன் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
  • பிறகு அங்கு உள்ள Activity Log என்ற பட்டன் மீது கிளிக் செய்யவும்.
  •    Activity Log பக்கம் திறந்தவுடன் நீங்கள் இதுவரை செய்துள்ள அனைத்து பரிமாற்றங்களும் தெரியும். 
  • அந்த பக்கத்தில் வலது பக்க மேல் மூலையில் உள்ள Dropdown மெனுவில் All என்பதிற்கு பதிலாக Search என்பதை தேர்வு செய்யவும்.
 

  • Search என்பதை தேர்வு செய்தவுடன் நீங்கள் உங்களின் Search History வரும்






  •  அதில் தேவையில்லாததை நீக்க அதற்க்கு நேராக உள்ள சிறிய வட்ட ஐகானை கிளிக் செய்து Delete கொடுக்கவும். 
    





 

  •  இதில் ஒன்று ஒன்றாகவும் delete செய்யலாம் மொத்தமாகவும் delete செய்யலாம் 
 
  • இதே முறையில் உங்களுக்கு தேவையில்லாத தேடல் விவரங்களை அழித்து கொள்ளுங்கள்.


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top