சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன் போதும்..
ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனா போன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும். ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மை தான். இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்ய வேண்டும்(இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்படமாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும். கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை (phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக் கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா ? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம் தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்
பின் வரும் FREEKALL சேவை இணையதளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top