இந்தியாவில் November 10ஆம் தேதி முதல் ’Skype’ சேவையை நிறுத்த போவதாக Micro Soft நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. Microsoft டால் அறிமுகப்படுத்தப்பட்ட ’Skype’’ இணையதள சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ’Skype’ சேவையால் தங்களுடைய வருவாய்க்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் Microsoft இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதன்படி உள்ளூர் செல்போன்களுக்கு இனி நவம்பர் 10 முதல் ’Skype’ மூலம் பேச முடியாது. ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசுவதில் எந்த தடையும் இருக்காது என Microsoft அறிவித்துள்ளது.
Microsoftன் இந்த அறிவிப்பு ’Skype’ன் இந்திய Usersகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கும் ’Skype’ மூலம் பேசுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்ற அறிப்பால் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்துள்ளனர்.
Video calling வசதி கொண்ட ’Skype’, குறுகிய காலத்தில் இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் video Calls மூலம் பலகோடி ரூபாய்கள் வருமானம் பெற்று வந்த முன்னணி நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ’Skype’ன் இலவச சேவை நிறுத்தப்படுவதால் இந்திய மக்கள் உள்ளூரில் இனி இலவசமாக Video Callகளை செய்ய முடியாது.
மேலும், Skype மூலமான Wifi, SmS வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று Microsoft ன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Voice அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக Whatsapp, அறிவித்துள்ளது
0 comments:
Post a Comment