ப்ளு டூத் மூலம் டயர்களின் அழுத்தம், தன்மை போன்றவற்றை கண்காணிக்கலாம்.போபோ டயர் (FOBO TYRE ) என்று அழைக்கபடும் இந்த கருவியை உங்கள் கார்களின் டயர்களில் பொருத்திவிட்டால் போதும்.
டயர்கள் பற்றின தகவல்களை அவ்வபோது உங்கள் ஸ்மார்ட் போனுக்கோ அல்லது காரின் டாஸ்போர்டுக்கோ இந்த கருவி அனுப்பிவிடும். இந்த கருவி 24/7 நேரங்களும் வேலை செய்யும். ஒரு வேளை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு, ப்ளுடூத் வழியாக தகவல் அனுப்ப முடியாத அளவு தொலைவில் நீங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் காரின் அருகில் வந்தவுடனே உங்கள் டயர்கள் பற்றின தகவலை இந்த கருவி அனுப்பிவிடும். இதன் மூலம் உங்கள் கார்கள் நடுவழியில் பஞ்சர் ஆகி நிற்பதை நீங்கள் தவிர்க்கலாம்.
இந்த போபோ டயர் கருவியை பொறுத்தமட்டில் திருட்டு பயம் வேண்டாம். இந்த கருவியை யாரும் திருடி கொண்டுபோய் வேறொரு காரில் இணைத்தால், வேலை செய்யாது. இந்த கருவி மூலம் நீங்கள் டயர்களை கவனித்துவந்தால் உங்கள் வண்டியின் மைலேஜ் உயர்வதுடன், உங்கள் டயர்களும் நீடித்து உழைக்கும் என்று இந்த கருவியின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இதன் விலை $90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment