நாம் எல்லோரும் Broadband அல்லது 3G அல்லது மொபைல் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் மாதமாதம் எவ்வளவு இன்டர்நெட் பயன்படுத்துறோம், அதற்காக எவ்வளவு செலவு செய்கிறோம். இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்கள் சொல்லும் Transfer Speed நமக்கு கிடைக்கிறதா என்பது போன்ற பல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா.
இவையனைத்தையும் தெரிந்து கொள்ள உதவுவதுதான், இந்த NetWorx என்னும் சிறிய மென்பொருள். இதனை கொண்டு வீட்டில் யார் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் என்பது வரை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தைகள் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவந்தால், இந்த சிறிய சாப்ட்வேர் மூலம் அவர்கள் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவை கட்டுபடுத்தலாம். நீங்கள் குறிப்பிட அளவிற்கு மேல் அவர்களுக்கு NetWorx சாப்ட்வேர் இணைய இணைப்பு வழங்காது.
நீங்கள் எதாவது வேலை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கபட்டால், இந்த சாப்ட்வேர் ஓசை எழுப்பி காட்டிகொடுக்கும். அதுமட்டுமில்லாமல், உங்கள் இணைய இணைப்பு ( அதாவது அதிகமாக Data transfer ) எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக படியாக பயன்படுத்தபட்டால் இவை உங்களுக்கு உடனே காட்டிகொடுக்கும். இதன் மூலம் அதிகமாக இன்டர்நெட் இணைப்பை உறிஞ்சும் இணையம் பக்கம் நாம் போகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்திய இன்டர்நெட் அளவை தினசரி, வாரம், மாதம் போன்ற வகையில் தெரிந்து கொள்ளமுடியும் . பின்னர் அவைகளை HTML, WORD, EXCEL போன்ற பார்மட்களிலும் தரவிறக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு நீங்கள் பயன்படுத்தும் இணைய அளவு தெரிந்துகொண்டு, அதற்கேற்றார் போல் உங்கள் இணைய Plan களை தேர்வு செய்துகொள்ளமுடியும் .
உங்களுடைய இணைய இணைப்பின் வேகத்தை அறிய , இதிலுள்ள Speed Test மூலம் சோதித்து அறிந்து கொள்ளலாம்
மென்பொருளை தரவிறக்க செய்ய
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.