பேஸ்புக் மூலம்
பணம் அனுப்பும் வசதியை கோடக் மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த
திட்டத்தின் பெயர் கே பே .இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு நீங்கள் பணம்
அனுபலாம்.
பொதுவாக நீங்கள்
யாருக்காவது பணம் அனுப்ப நினைத்தால்
அவர்களுடைய வங்கி கணக்கு எண் IFSC ,வங்கியின் விலாசம் போன்றவை தேவைப்படும் ,ஆனால்
கே பே மூலம் பணம் அனுப்பும் பொது இவையெல்லாம் தேவைபடாது.அது போல் இன்டர்நெட் பாங்கிங்
,டெபிட் கார்டு போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை .பிறகு எப்படி பண
பரிவர்த்தனை நடைபெறுகிறது
2. இணையும் போது
உங்கள் வங்கியின் தகவல்களை கொடுக்கவேண்டும்
3. பிறகு பணம்
அனுப்ப வேண்டிய பேஸ்புக் நண்பரின் பெயரை கிளிக் செய்து ரூபாய் 2500 குள் பணம்
அனுப்பிகொள்ளலாம்
4. ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் அனுப்பும் போதும் உங்களுடைய
கடவுச்சொல் கேட்கப்படும்
இதன் மூலம் நீங்கள் 24 மணி நேரமும்
நீங்கள் விரும்பும் பேஸ்புக் நண்பர்களுக்கு பணம் அனுபலாம் . இந்த சேவை “Bank Agnostic Instant Funds Transfer Platform”
என்ற முறையின் கீழ் செயல்படுகிறது
பணம் பெரும் நபர் செய்யவேண்டியவை
பணம் பெரும் நபர் ஏற்கனவே கே பே தளத்தில் கணக்கு
வைத்திருந்தால் நாம் அனுப்பிய பணம் நேரடியாக
அவரது வங்கி கணக்கிற்கு சென்றுவிடும் இல்லையெனில் நாம் பணம் அனுப்பிய 48 மணி நேரத்திற்கு கே பே தளத்தில் கணக்கு தொடங்க
வேண்டும்.அப்படி செய்ய தவறினால் நான் அனுப்பிய பணம் திரும்ப நமது வங்கி கனகிற்கே
திரும்ப வந்துவிடும்
எவ்வளவு பணம் அனுப்ப முடியும்
ஒரு நாளைக்கு ரூபாய் 2500
ஒரு மாதத்திற்கு ரூபாய் 25000 வரை அனுபலாம்
தற்போது இந்த சேவையை ஆதரிக்கும்
வங்கிகள்
ஸ்டேட் பேங்க் ,ஆக்சிஸ் வங்கி ,கனரா
வங்கி ,ஆந்திரா வங்கி ,கரூர் வைஸ்யா போன்ற வங்கிகளும் மற்ற பல வங்கிகளும் இந்த
சேவையை ஆதரிக்கின்றன.
கே பே மூலம் செய்யும் பரிவர்த்தனை
பாதுகாப்பானாதா
நிச்சியமாக பாதுகாப்பானது என்று கோடக்
மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது .இதில் செய்யப்படும் பணம் பரிமாற்றம்
அனைத்தும் பாதுகாப்பு மிகுந்த மகேந்திரா நிறுவன வங்கிகள் (Server) மூலம் செய்யபடுவதால் எப்போதும் பாதுகாப்பிற்கு குறை இல்லை. அதனால்
இனிமேல் சந்தோசமாக உங்கள் நண்பர்களுக்கு பணம் அனுபலாம்.
0 comments:
Post a Comment