தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டினால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் முழுமையாக கிடைக்காத நிலையில், தொழில்களும் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. அதிலும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மீண்டும் அதிக மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இங்குள்ள மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு போன்ற பல பிரச்சினைகளால் இந்த மின் உற்பத்தி குறைந்ததுடன் கோடை காலம் துவங்கியதால் மின்சார தேவையும் அதிகரித்தது. இதனால்தான் சென்னை உட்பட தமிழகமெங்கும் பவர்கட் நிலவுகிறது. இந்லையில் அண்மையிலுள்ள புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் குளிர்பானக் கடை ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் புதுச்சேரி கருவடிகுப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார்.
இச்சூரிய ஒளிசக்தியால் இயங்கும் கடையின் மேற்புறத்தில் சூரிய ஒளியை சேமிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சுமார் 1000 வாட்ஸ் வரை மின்சாரத்தை சேமிக்கும் திறனுள்ளது. இந்த தள்ளு வண்டியிலேயே ஒரு பிரிசர், மிக்ஸி, விளக்குகள் உள்ளன. இது இரவிலும் இயங்கக் கூடியது. இதன் மொத்த செலவு ரூ.1.4 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக ராமதாசிடம் கேட்டபோது: மே தினத்தை முன்னிட்டு சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் குளிர்பான கடையைத் தொடங்கி உள்ளேன். இதை போகோஸ் இந்தியா என்ற ஒரு தனியார் நிறுவனம் எனக்கு அமைத்து தந்துள்ளது.கடையின் செயல்பாட்டை ஒரு மாதம் அந்நிறுவனத்தினர் கண்காணிக்க உள்ளனர். அதன்பின் இதில் ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிப்பர்” என்றார்.
0 comments:
Post a Comment