விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சேப் மோடில் தொடங்குவதற்கான வழிமுறைகள் வழக்கம் போல் அல்லாமல், சற்று மாறுதலுடன் தரப்பட்டுள்ளன. அதனை இங்கு காணலாம்.
பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில், அதன் பூட் மெனுவில் இருந்து, சற்றுக் கவனமாக கையாள்கையில், சேப் மோடுக்கான வழிகிடைக்கும். ஆனால், வழக்கம் போல் பூட் ஆகவில்லை என்றால், இன்ஸ்டலேஷன் டிஸ்க் கொண்டு பூட் செய்திடலாம். இங்கு சில செயல்முறைகளை மேற்கொண்டால், பூட் மெனு கிடைக்கும்.
1. விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை இன்ஸ்டலேஷன் அல்லது சிஸ்டம் ரெகவரி மீடியா கொண்டு பூட் செய்திடவும். முதலில் கிடைக்கும் திரையில் உங்களுடைய மொழி என்னவென்று ஆப்ஷன் கேட்கையில், Next என்பதனை அழுத்தவும்.
2. அடுத்து கிடைக்கும் திரையில், "Repair your Computer” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. பின்னர் Troubleshoot என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து, Advanced Options என்பதில் கிளிக் செய்திடவும். இதில், Command Prompt என்பதில் இறுதியாகக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியல், நீங்கள் பயன்படுத்தும் பூட் மீடியாவைப் பொறுத்து வேறுபடும். ஆனால், உங்களுக்கு Command Prompt என்ற ஆப்ஷன் கிடைப்பதனால், கட்டளையை இயக்கலாம். கட்டளைச் சொற்களாக, எந்தப் பிழையும் இன்றி, bcdedit /set {default} bootmenupolicy legacy என டைப் செய்து எண்டர் தட்டவும். ஒரே விநாடியில் இதற்கான செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
இதனை மேற்கொண்ட பின்னர், பூட் செய்தால், பூட் இயக்கம் நடைபெறும் போது F8 என்ற கீயை அழுத்தி, கிடைக்கும் மெனு மூலம் சேப் மோடுக்குச் செல்லலாம். உங்களிடம் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 இன்ஸ்டலேஷன் டிஸ்க் அல்லது சிஸ்டம் ரெகவரி டிஸ்க் இல்லை என்றால், மேலே குறிப்பிட்டுள்ள கட்டளை வரியினை கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் அமைத்து இயக்கலாம்.
0 comments:
Post a Comment