Safe Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது, அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம். 
Pull oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின் bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது. நிறுத்தப்பட்ட கணினி தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத் தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும் சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.
கணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode என்பதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும் (startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள் தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல் இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன் ஒரு option வரும். இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள் தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.
+autoexec.bat or config.sys files
+device drivers
+normal graphics device driver ற்குப் பதில் standard VGA graphics mod ஐப் பயன்படுத்தும்.
+standard system.ini file ற்குப் பதில் system.cb பயன்படுத்தும்.
+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்
இந்த safe mode இல் Safe Mode, Safe Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள் உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்று இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை, அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந்து கொண்டே command line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம். இதில் சில உத்தரவுகளை (chkdsk,sfcscan,disk dir….இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது. (மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)
இது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்த சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ் கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி, multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில் சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன் வருகிறது?
விஸ்டாவிற்கு முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற) இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும்.



Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top