உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு பேச, இலவசமாக நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஸ்கைப். ஸ்கைப் பயன்படுத்தும் எவருடனும் இலவசமாக நாம் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகில் பெரும்பாலானவர்கள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இந்த புரோகிராம், புதிதாக இதனைப் பயன்படுத்துபவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் இயக்கப்பட்டவுடன் கிடைக்கும் ‘Getting Started Wizard’ மூலம், நாம் அடிக்கடி மேற்கொள்ளும் பணிகளைச் செயல்படுத்தலாம். தொடர்புகளை கண்டறிதல், பெர்சனல் தகவல்களை எடிட் செய்தல், சோதனை அழைப்புகளை மேற்கொள்ளுதல் போன்றவை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன
Link:
0 comments:
Post a Comment