கணினியின் வேலைகளை மிக விரைவாக செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. சுருக்குவிசைகளை பயன்படுத்தியும் சாளர மெனு தேர்வுகள் (options) கொண்டும் கணினியில் பணிகளை விரைந்து செய்ய இயலும். கணினியில் உள்ள தரவுகளை நகலெடுக்கவோ (Copy), நகர்த்தவோ (Cut) சுருக்கு விசைகளை பயன்படுத்துவோம் இல்லையெனில் சுட்டெலியால் வலது கிளிக் தோன்றும் பாப்அப் மெனுவில் Send to தேர்வில் குறிப்பிட்ட ஆப்பஷனை தேர்வு செய்தும் காப்பி செய்து கொள்ள முடியும்.
புளுடூத் மூலமாக தகவலை பகிர விரும்பும் போது பெரும்பாலும் Send to ஆப்ஷனை பயன்படுத்திதான் பகிர்ந்து கொள்வோம். இந்த Send to ஆப்ஷனை தெரிவு செய்யும் போது அதில் குறிப்பிட்ட சில ஆப்ஷன் மட்டுமே இருக்கும். நமக்கு ஏற்றவாறு இதில் பல்வேறு ஆப்ஷன்களை இணைத்துக்கொள்ள முடியும்.
முதலில் விண்டோஸ் கி மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் shell:sendto என்று தட்டச்சு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் Send to ஆப்ஷனில் கொண்டு வர நினைக்கும் அப்ளிகேஷனிற்கோ, கோப்பறைக்கோ அல்லது ஏதாவது ஒரு டிவைஸ்கிற்கோ சுருக்குவிசை ஐகானை உருவாக்கவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நீங்கள் Send to ஆப்ஷனில் கொண்டு வர நினைக்கும் அப்ளிகேஷனிற்கோ, கோப்பறைக்கோ அல்லது ஏதாவது ஒரு டிவைஸ்கிற்கோ சுருக்குவிசை ஐகானை உருவாக்கவும்.
இதற்கு வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New > Shortcut என்பதை தெரிவு செய்யவும். அடுத்து குறிப்பிட்ட கோப்பறையினையோ, டிவைஸ்னையோ அல்லது அப்ளிகேஷனையோ தெரிவு செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Browse பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட சுருக்குவிசை ஐகானுக்கான தொடர்பினை தேர்வு செய்யவும். பின் Ok பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Next பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது இப்போது சுருக்குவிசை ஐகான் உருவாக்கப்பட்டு இருக்கும்.
இப்போது Send to பாப்அப் மெனுவில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஆப்ஷன் இருக்கும், அதனை பயன்படுத்தி தரவுகளை நகர்த்திக்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.