பதில்: ஹைபர்னேஷன்(Hibernate ) நிலை என்பது, மின்சக்தி கிட்டத்தட்ட எதுவுமின்றி உயிரற்ற நிலையில் கம்ப்யூட்டரை வைப்பதற்குச் சமம் ஆகும். ஸ்லீப் (Sleep Mode)மோடில் கம்ப்யூட்டரை அமைக்கும் போது, அதன் முக்கிய சிஸ்டம் பவர் இயக்க நிலையில் இருக்கும். துணை சாதனங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் பவர் அற்ற நிலையில் இருக்கும். ஆனால், ஹைபர்னேஷன் நிலையில், சிஸ்டம் பவர் இன்றி இருந்தாலும், அதுவரை நாம் மேற்கொள்ளப்பட்ட வேலை தயார் நிலையில் மீட்டுப் பெறும் வகையில் இருக்கும்.
ஹைபர்னேஷன் நிலையில், ராம் நினைவகத்தில் தங்கும் நாம் மேற்கொண்ட வேலை, ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கப்படுகிறது. டிஸ்க்கில் ராம் நினைவகத்தில் இருந்த வேலை பதியப்பட்ட பின்னர், சிஸ்டமானது தன் சக்தியை விட்டுவிடுகிறது. ஏறத்தாழ, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்திவிட்டால், என்ன நிலைக்குச் செல்லுமோ, அந்த நிலைக்குச் சென்றுவிடுகிறது. மீண்டும் பவர் செலுத்தப்படுகையில், உடனே ராம் டிஸ்க்கிலிருந்து சேவ் செய்த அனைத்து தகவல்களும், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து மாற்றப்பட்டு, பயனாளர் எந்த நிலையில் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ, அந்த நிலைக்கு மீண்டும் வந்துவிடும்.
அதிக நேரம் கம்ப்யூட்டரை இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தால், ஹைபர்னேஷன் நிலையே சரியானது. எடுத்துக் காட்டாக, வேலை பார்த்துக் கொண்டிருக்கையில், வெளியே சென்று, உணவு சாப்பிட்டுப் பிறகு வந்து, பணியைத் தொடர்வதாக இருந்தால், ஹைபர்னேஷன் நிலைக்குக் கம்ப்யூட்டரை அமைத்துச் செல்லலாம். மிகக் குறுகிய காலத்திற்கு, கம்ப்யூட்டரிலிருந்து விடுதலை பெறுவதாக இருந்தால், ஸ்லீப் மோட் சரியான ஒன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment