போனை எடுத்தவர்கள் போனை சுவிட்ச்ஆப் செய்திருந்தாலும் சிம்கார்டை தூக்கி எறிந்தாலும்கூட கண்டுபிடித்துவிடலாம்.
மொபைல் போன் என்பது இன்றைய வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் 2ஜி, 3ஜி தொழில்நுட்ப இணையதள வசதிகளுடன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை மினி கம்ப்யூட்டர் போலவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
விலை உயர்ந்த செல்போன்களை உபயோகிப்பவர்கள் அந்த போன் தொலைந்து விட்டாலோ, திருட்டு போனாலோ அதில் உள்ள ரகசிய பைல்கள், விபரங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடிக்கும் வகையில் புதியதாக ஒரு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த கார்த்திகேயன் (41). இதுகுறித்து கார்த்திகேயன் கூறு கையில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செல் ஸ்னீப்பர் என்ற சாப்ட்வேரை தங்களது ஆன்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து விட்டால் போன் தொலைந்து போனா லோ, திருட்டு போனாலோ அடுத்த நிமிடமே அதை செயலிழக்க செய்ய முடியும். மேலும், சில மணி நேரத்திலேயே அந்த போன் எங்கு உள்ளது என்பதையும் கண் டறிய முடியும்.இதற்கு மற்றொரு போனிலும் இந்த சாப்ட்வேரை இன்ஸ் டால் செய்திருக்க வேண்டும்.
புதிய சாப்ட்வேர் மூல மாக தங்களது போன் எந்த நாடு, எந்த மாநிலம், மாவட்டம், தாலுக்கா, நகரம், எந்த ஊரில் உள்ளது என்பது போன்ற அனைத்து விபரங்களுமே சில மணி நேரத்திலேயே கண்டறிய முடியும். போனை வீட்டிலேயே தவறுதலாக வைத்து விட்டு சென்றா லும் ஒரு எஸ்.எம்.எஸ். மூல மாக லாக் செய்து விடலாம். போனை எடுத்தவர்கள் போ னை சுவிட்ச்ஆப் செய்திருந் தாலும் இந்த புதிய சாப்ட்வேர் மூலமாக கண்டறியலாம்.
திருடப்பட்ட போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தானாகவே போன் லாக் ஆகிவிடும். 2வது எஸ்.எம்.எஸ் கொடுத்தால் அந்த போனில் உள்ள ரகசிய தகவல்கள், போன் நம்பர்கள், அனைத்தும் மறைந்து விடும். பின்னர், 3வது எஸ்.எம்.எஸ். கொடுத்தால் திருட்டு போன செல்போனிற்கு எஸ்.எம்.எஸ். அழைப்பு வரும். திருடப்பட்ட போனை ஆன் செய்தால் அந்த போனில் இருந்து எங்கிருந்து பேசினாலும், புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்ட போனில் நாமும் அதை கேட்கலாம். 4வது ஆக ஒரு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் அந்த போன் எங்கு உள்ளது என்பது தெளிவாக தெரிந்து விடும். அதை வைத்து சுலபமாக போனை திரும்ப பெறலாம்.
அந்த போனில் இருந்து புதிய சிம்கார்டை போட்டு ஆன் செய்தாலே அந்த புதிய எண்ணில் இருந்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும். உடனடியாக அந்த எண்ணிற்கு 4 விதமான எஸ்.எம்.எஸ் அனுப்பினால் அடுத்த சில மணி நேரத்திலேயே மொபைல் போனை கண்டறியலாம்.
இந்த புதிய சாப்ட்வேர் மூலமாக உங்களுக்கு வரும் குறுந்தகவல்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். ரகசிய செல் நம்பர்களை போன் புத்தகத்தில் வைக்காமல் மறைமுகமாக வைத்துக் கொள்ள முடியும். போன் உங்கள் கையில் இல்லாத நேரத்தில் நீங்கள் குறித்து வைத்துள்ள ரகசிய எண்ணில் இருந்து வரும் குறுந்தகவல்களும், மிஸ்டுகால்களும் நேரடியாக ரகசிய போல்டருக்கு சென்று விடும். இன்றைய சூழ்நிலையில் உங்கள் மொபைல் போனில் இந்த சாப்ட்வேரை எளிதாக பயன்படுத்த முடியும். இந்த புதிய சாப்ட்வேரை ஆன்ட்ராய்டு மொபைல் போன் அறிமுகம் செய்யும் முன்பே இதை நான் உருவாக்கினேன். தற்போது ஆன்ட்ராய்டு போன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப திருட்டு போகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விலை உயர்ந்த செல்போன் களை வாங்குபவர்கள் போனை பாதுகாத்து கொ ள்ள இந்த புதிய சாப்ட்வேர் பெரிதும் உதவும் என்றார்.
புதிய சாப்ட்வேரை உருவாக்கிய கார்த்திகேயன் தற்போது திருக்குறளை ஆடி யோ புத்தகமாக ஒலிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த தகவல் பயனுள்ளதாக
இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே எங்கள் பேஜ் இல் இன்வைட்டு செய்து கொள்ளுங்கள்
என்னுடைய 2 கைபெசி தொலைந்து போய்விட்டது நானும் எத்தனையோ முயட்சி செய்தும் கண்டெ பிடிக்க முடியவில்லை அதுக்கு எதாவது வழி ஈறுக்கிறத எப்ப வாங்கிய போன் ஈப்படி பாதுகாப்பு செய்வது
ReplyDelete