நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணையஉலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*http://www.zedge.net/

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.zedge.net/என்று டைப் செய்து இணையலாம்.

* http://www.mobile9.com/

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

http://www.getjar.com/

முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில்  என்று டைப் செய்து இ ணையலாம்.

*http://apniapps.com/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

http://mobilemastee.com/

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://www.dailymobile.net/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

http://www.ipmart-forum.com/

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.




இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே எங்கள் பேஜ் இல் இன்வைட்டு செய்து கொள்ளுங்கள் 










Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

  1. Tải miễn phí nhạc chuông hay cho điện thoại của bạn, top những bài nhạc chuông mới hot nhất hiện nay
    https://nhacchuonghay.info/,
    https://nhacchuonghay.info/nhac-iphone/

    ReplyDelete

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top