எந்த வேளை எந்த உணவை சாப்பிட வேண்டும் என்று தெரியாமல், அல்லது தெரிந்தும் நேரம் இல்லாத காரணத்தினால் நம் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறோம்.கண்ட நேரத்தில் கண்ட உணவை சாப்பிடும் நம்மவர்களுக்கு உணவுக்கட்டுப்பாட்டை எப்படி எல்லாம் கடைபிடிக்கலாம் என்பதற்கு பலவிதமான ஐடியாக்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உணவு சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் மட்டும் உடல் எடை குறைந்துவிடாது என்று சொல்லி ஆரம்பிக்கும் இந்தத்தளம் நம் சாப்பாட்டை குறைக்காமல் என்ன சாப்பிட்டால் உடல் எடை கூடும் குறையாது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துச்சொல்கிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் Start Today என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடிக்கடி வயிறு பசிக்கிறது உணவுக்கட்டுப்பாடு என்று இருக்க முடியவில்லை என்று சொல்லும் நபர்களுக்கு நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டாம் பசிக்கும் நேரம் வேண்டும் சாப்பிடுங்கள் உடல் எடை கூடாது , தொப்பை வைக்காது என்று சொன்னால் எப்படி இருக்கும் ஆம் இதைத்தான் இத்தளம் சொல்கிறது, காலையில் எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள் என்று கேட்கும் இத்தளம் காலை உணவில் என்ன உணவு வகைகள் எல்லாம் கேலரி குறைவாக இருக்கிறது என்று சொல்வதில் தொடங்கி ஒரு நாளைக்கு எப்பவெல்லாம் சாப்பிடலாம் என்பதை அழகாக பட்டியலிட்டு காட்டுகிறது, புதுமை விரும்பிகளுக்கும் உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவருக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்
0 comments:
Post a Comment