மேலை நாட்டு மக்களிடம் “உதோப்பியா” எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம்.



ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள் Google நிறுவனத்தால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன.  தங்களின் வரைபட சேவைக்காக நூற்றுக்கணக்கான தானியங்கி வண்டிகளை எட்டுபக்கமும் படமெடுக்கும் வகையில் தயார் செய்து ஓட்டி வந்தது கூகுள் நிறுவனம்.




இனி இந்தவகை கார்களை பொதுமக்களும் வாங்கி ஒட்டிக் கொள்ளலாம் எனும் அறிவிப்பை கலிபோர்னியா மாகாண உந்து  வாகனத் துறை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில்., இந்த வாகனத்தை பயன்படுத்தும் போது, ஒரு சிறப்பு  ஓட்டுநர் உரிமம் உள்ள நபரும் வாகனத்தில் இருக்க வேண்டும் எனும் விதியையும் சொல்லியுள்ளார்கள். அதாவது, ஒரு வேலை இந்த வாகனம் ஏதேனும் குளறுபடி செய்தாலும் அதை தன் வசப்படுத்தி வாகனத்தை ஓட்டும் வல்லமை பெறுவது தான் அந்த சிறப்பு ஓட்டுநர் உரிமத்தின் சிறப்பு. காலம் செல்லச் செல்ல, இந்த வகை வாகனங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன்  இந்த விதி தளர்த்தப் படலாம். ​



இதே தொழில்நுட்பம்  20-30 ஆண்டுகளில் அமேரிக்கா முழுவதும் லாரி மற்றும் இதர வாகனங்கள் ஓட்டும் அனைத்து ஓட்டுநர்களையும் இல்லாமல் செய்துவிடும். அதற்கு அடுத்த 20 ஆண்டுகளில் இது உலகம் முழுவதும் பரவும்

தொழிலாளர் நலன் எனும் நோக்கத்தில் இதை பார்த்தாலும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 12 லட்சம் மக்கள் இறக்கிறார்கள். இதனால், சாலை வேகம்  பேணுதல்., நாம் போக வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கிவிட்டு வண்டியை அதுவாக போய் ஓரிடத்தில் நிறுத்திக்கொள்ள செய்வது. பெட்ரோல் இல்லை என்றால் அதுவே சென்று போட்டுகொள்வது என பல வசதிகள் வரும். ஆனாலும் பிற்கால சந்ததிகளுக்கு வாகன ஓட்டுதல், முடிவெடுத்தல் போன்ற பல அறிவுகூர்மையான வேலைகளையும் மனிதன் செய்யாமல் அனைத்தையும் எந்திரங்கள் செய்யுமாறு மாற்றிவிட்டு. பேசும் சோம்பேறி மனிதக் கூட்டம் மட்டுமே எஞ்சும் என நினைக்கிறன்.
உதோப்பியா (Utopia)  பற்றிய பேச்சு  எப்போதாவது., ஒருவரின் பென்ஸ் காரில் நாய் சிறுநீர் கழித்துவிட்டால்., இந்த உலகமே சரியில்லை உலகத்தையே மாற்றும் வல்லமை நமக்கு  ஏன்  இல்லை என 7 நட்சத்திர ஓட்டல் மாடியில் இருந்து பேசிக்கொண்டே.,எங்கோ ஒரு ஏழை நாட்டு மீனவன் ஏற்றுமதி செய்த மீனை உண்டு களிப்பார்கள்.
 
அதிலும் பல பெரிய நிறுவனங்கள் “தொழில்நுட்ப  உதோப்பியா” (Tech Utopia) எனும் சொல்லை பயன்படுத்துவார்கள்.  அதாவது., உலகின் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண்பது. இந்த சிந்தனைகள் அனைத்தும் பெரும்பாலும் நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளுபவர்களுக்கே சாத்தியம் என இருந்தது., அதை மெல்ல மெல்ல நடுத்தர மக்களுக்கும் கொண்டு சேர்த்து புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்று இந்த தானியங்கி வாகனங்கள். இது வரவேற்க்கத்தக்கது.
 











Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top