மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான் இப்படி இருக்கும் மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கலாம். தறவிரக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து, அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும் உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம். கண்டிப்பாக பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக பிரிக்க விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்
0 comments:
Post a Comment