நாளை புதிதாக துபாய் அல்லது மற்று ஏதேனும் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கு இருப்பவரிடம் 1 மாதத்திற்கு அல்லது 1 நாள் ஆகும் செலவு என்ன என்று ஒருமுறைக்கு பல முறை கேட்ட பின் தான் அந்த நாட்டிற்கு செல்வோம், ஆனால் நாம் புதிதாக செல்லும் நாட்டில் நமக்கு நண்பர்கள் இல்லை என்றால் இந்தத்தகவல்கள் எல்லாம் யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று கேட்கும் நமக்கு ஒரு நாட்டில் வசிக்க ஆகும் செலவை ( Living Costs ) கூற ஒரு தளம் இருக்கிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக நாம் ஒரு நாட்டிற்கு செல்வதென்றால் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி சாப்பாட்டு செலவு , தங்கும் செலவு மற்றும் பேருந்து அல்லது வாடகை வாகனம் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆகும் செலவு என அனைத்தையும் துல்லியமாக நமக்கு எடுத்துச் சொல்ல இந்தத்தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டில் வசிக்க இருக்கிறோமோ அந்த நாட்டை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த நாட்டில் 1 நாளைக்கு ஆகும் செலவு என்ன என்பதை காட்டுகிறது வலது பக்கம் மேல் இருக்கும் Select your currency என்பதில் எந்த நாட்டு பணமதிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த நாட்டு பணத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல இருக்கும் நம் நண்பர்கள் எந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமோ அந்த நாட்டிற்கு நமக்கு ஆகும் செலவை கண்டுபிடிப்பதோடு நம் சம்பளத்தையும் தீர்மானிக்க இந்தத்தளம் உதவும். செலவு சற்று கூடுதலாகவே காட்டுகிறது அதனால் இங்கு குறிப்பிட்டு காட்டும் பணத்தை விட நமக்கு ஒரு நாட்டில் ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
0 comments:
Post a Comment