உங்கள் கணினி வேகமான செயல் திறனுடனும்பயன்படுத்த எளிதாகவும் இருக்கவேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருக்கும். புதிதாக வாங்கிய கணினியில் இத்தகைய செயல்திறன் இருக்கும். காரணம்குறைந்த அளவு கோப்புகளும்அதிக அளவு இடமும்வேண்டாத குப்பைகள் மிக மிகக் குறைந்த அளவில் இருப்பதுமே.அதுவேஓர் ஆண்டிற்குப் பிறகு என்றால் டெஸ்க்டாப் நிறைய ஐகான்களும்பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட ரெஜிஸ்ட்ரிஅதிக அளவு கோப்புகள்என்று நிறைந்து வழியும் குப்பைத்தொட்டி போல கணினி மாறியிருக்கும். இதனால்செயல் திறன் குறைந்துகணினியைத் தொடங்குவதற்குக்கூட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு மாறிய கணினி விரைவிலேயே செயலிழந்து போகும் வாய்ப்பும் உண்டு.கணினியின் வன்தட்டு (ஹார்ட்டிஸ்க்) செயலிழந்து போகுமானால் நம்முடைய விலை மதிக்க முடியாத கோப்புகளையும் சேர்ந்தே இழக்க நேரிடும். இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கணினி பயன்படுத்து
பவர்கள் விழிப்புடன் இருந்து கணினியைப் பாதுகாப்புடன் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.


கணினி விரைவான செயல்திறனுடன் இயங்க 10 கட்டளைகளை ஒவ்வொரு கணினிப் பயனரும் கடைப்பிடிக்கவேண்டும்.

1.கணினியின் டெஸ்க்டாப்பில் நாம் அதிகமாக பயன்படுத்தாத மென் பொருள்    ஷார்ட்கட் ஐகான்கள் இருந்தால் முதலில் அவற்றை நீக்கவேண்டும்.  அடுத்ததாக டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்த ஃபைல்கள்  மற்றும் பிற  ஃபைல்கள்ஃபோல்டர்களைப் போட்டு நிரப்பி வைக்காதீர்கள்.

2.கணினி தொடங்கும்போது தேவையில்லாத புரோக்ராம்கள்  பின்புலத்தில்இயங்கலாம். அவற்றை ஸ்டார்ட் அப் (Startup) பகுதியிலிருந்து  நீக்கவும் அல்லது அவற்றின் செயல்பாட்டை தடை செய்யவும்.

3.முடிந்தவரை மாதத்திற்கு ஒரு முறையாவது ஹார்ட் டிஸ்க்    டிரைவ்களைடிபிராக்மெண்ட் (Defragment) டூலைப் பயன்படுத்தி கோப்புகளை  சீராக்கவும்.

4.டெஸ்க்டாப்பை அழகூட்ட அதிக கொள்ளளவு கொண்ட  படங்களையோமேம்பட்டகிராபிக் அனிமேஷன் தீம்களையோ    அமைக்காதீர்கள். எளிமையான வடிவமைப்பே கணினி வேகமாக இயங்க  உதவும்.

5.இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர் என்றால் தற்காலிக  இணையக்கோப்புகள் (Temprovary Internet Files) மற்றும் குக்கீகளை  (Cookies)  தினமும் அழித்துவிடவேண்டும்.

6.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வைரஸ்  எதிர்ப்புமென்பொருளுக்கான மேம்படுத்தல்களை  (Updates) நிறுவிக்கொள்ளவும். இது வைரஸ்,மால்வேர்ஸ்பைவேர்கள்  ஆகிய எண்ணற்ற தீங்கிழைக்கும் நிரல்களிடமிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க உதவும்.

7.மென்பொருள் இயக்கத்திற்கு உதவும் வகையில் உருவாகும் தற்காலிக  கோப்புகளை (Temp Files & Prefetch Files ) தினந்தோறும் அழித்துவிடவும்.

8.சமீபத்தில் பயன்படுத்திய ஃபைல்களுக்கான ஷார்ட்கட்கள்  ரீஸண்ட்டாக்குமெண்ட்ஸ் பகுதியில் பட்டியலிடப்படும். இவற்றையும்  நீக்கவும்.

9.புதிய மென்பொருள்கள் நிறுவும்போது ஹார்ட் டிஸ்க்  மற்றும் ரிஜிஸ்ட்ரியில் அதற்கென இடம் ஒதுக்கப்படுகிறது. அதிக  மென்பொருள்கள் பதியப்படுவதால் ரிஜிஸ்ட்ரி செயல்படும் வேகம்  குறையும். எனவே ரிஜிஸ்ட்ரி கிளீனர் மென்பொருளை இரு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரியை சீர் செய்யவும்.

10.இவையல்லாமல் கணினி வேகத்தைக் கூட்ட சிஸ்டம் பிராப்பர்டீஸ்  பகுதியில்Advanced சென்று “Adjust for  best                    performance”  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தினால்கணினியின் வேகம்அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம். தேவையற்ற கோப்புகளை அழிக்க சிகிளீனர்(C-Cleaner) போன்ற பல இலவச மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றைப் பதிந்து தினமும் பயன்படுத்துவது அவசியமாகும்.



Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

1 comments:

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top