ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.
காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.
கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?
மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.
கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன
இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.

இந்த தளத்தில் அனைத்தும் வீடியோவாக கிடைக்கும் 



உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 

1.FUN EASY ENGLISH
அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.

2.GO 4 ENGLISH .COM
இந்த தளம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சொந்தமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான ஆங்கில அறிவை இந்த தளம் வழங்குகிறது.

3. LEARN ENGLISH FREE ONLINE
ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்.

4.EXAM ENGLISH
பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும் . இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்.


Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top