இன்று பலபேர் Gmail பயன்படுத்துகிறார்கள் ,அதில் முக்கியமான
கோப்புகள் ,புகைப்படங்கள்,முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருப்போம்
.ஆனால்
எல்லோருக்கும் சில நேரங்களில் ஒரு சந்தேகம் வரலாம் .அது
என்னவென்றால் நம் ஜிமெயில் அக்கௌன்ட்டை நாம் மட்டும் தான் பார்கிறோமா
அல்லது வேறு யாரவது நமக்கு தெரியாமல் பயன்படுத்துகிறர்களா என்று ? .
இதை அறிந்துகொள்ள ஒரு வழி உள்ளது .முதலில் உங்கள் ஜிமெயில்
அக்கௌன்ட்டை திறந்து கொள்ளுங்கள்,(இன்பாக்ஸ்).பிறகு ஸ்க்ரோல் செய்து
(SCROLL) உங்கள் இன்பாக்ஸின் கீழே சென்றால் “DETAILS “ என்று இருக்கும்
.இப்போது “DETAILS “ சொடுக்கினால் கடைசியாக உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டை
எங்கிருந்தெல்லாம் பயன்படுத்தியுள்ளீர் என்ற விவரம் உங்களுக்கு தெளிவாக
கிடைக்கும் .
ஆனால் இதில் ஒரு சிறிய சிக்கல் .ஜிமெயில் கடைசியாக பயன்படுத்திய
விவரம் காண்பிக்கையில் IP Address(Internet Protocol) ஆகத்தான்
காட்டும்.(உங்கள் IP Address தெரிந்து கொள்ள what is my ip )
அதைவைத்து கொண்டு உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டை எங்கிருந்து
பயன்படுத்தியுள்ளர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.காட்டப்பட்ட IP Address
விவரங்களில் உங்கள் IP Address தவிர வேறு எதாவது IP Address இருகிறதா என்று
பாருங்கள் .அப்படி இல்லையெனில் எதுவும் பிரச்சனை இல்லை .அப்படி ஒருவேளை
இருந்தால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்
1.நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டை வீட்டு கணினியுளும்,
மொபைலிலும் அல்லது அலுவலகத்திலும் அல்லது நண்பர்கள் இல்லத்திலோ அல்லது நெட்
சென்டேரிலோ மாற்றி மாற்றி பயன்படுத்தி கொண்டிருந்தால் வேறொரு IP Address
காட்டலாம் .
அப்படி உங்களுக்கு தெரியாத IP Address எதாவது காட்டப்பட்டால் உடனடியாக கடவுசொல்லை (Password) மாற்றுவது நல்லது .
0 comments:
Post a Comment