ஸ்மார்ட் போன் உபயோகிக்காத இளைஞர்களே இல்லை என்னுமளவிற்கு ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

அதைப் போலவே ஸ்மார்ட்போனில் இல்லாத வசதிகளே இல்லை. அந்தளவிற்கு நாளுக்கு நாள் பல புதிய வசதிகள் வந்துகொண்டே உள்ளது. 

அதே வேளையில் இதுபோன்ற பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திடும்பொழுது ஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சக்தியும் கூடுதலாக செலவழிகிறது. 




மின்சக்தியை வழங்க தரமான பேட்டரி அதில் அமைந்திருக்க வேண்டும். பிராண்டட் கம்பெனி என்று சொல்லக்கூடிய போன்களில் தரமான பேட்டரியும் அமைந்திருக்கும்

பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கவும், நீண்ட நேரம் பேட்டரி பயன்படவும், அதை நாம் பயன்படுத்தும் வித்த்தில்தான் உள்ளது. 

ஒவ்வொரு வகை பேட்டரியையும், அதில் குறிப்பிட்டவாறு முறையாக சார்ஜ் செய்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்.

இன்றைய கால ஸ்மார்ட் போன்களில் இரண்டு வகை பேட்டரிகள் பயன்படுத்தபடுகின்றன. 

1. லித்தியம் அயன் பேட்டரிகள் வகை - lithium ion batter

2. லித்தியம் பாலிமர் பேட்டரி வகை - lithium polymer batter

பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் லித்தியம் அயன் வகை பேட்டரிகளே பயன்படுத்தபடுகின்றன. 

லித்தியம் அயன் வகை பேட்டரிகளைப் பராமரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். 

அதற்கு முன்பு பேட்டரிகளை காலி செய்யும் ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்கள் எவை என்று பார்த்ததுவிடுவோம். ஸ்மார்ட்போனில் இயங்கும் அப்ளிகேஷன்கள்தான் பெரும்பாலான பேட்டரி சார்ஜை தீர்த்துவிடுகிறது. 

குறிப்பாக வைஃபை, 3ஜி, 2ஜி இன்டர்நெட், ப்ளூடூத் (bluetooth, wi-fi, 3G, 4G) போன்ற வசதிகளே பெரும்பாலான பேட்டரியை விழுங்குகின்றன. 

அதைப் போலவே பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன்களும் ஸ்மார்ட் போனின் பேட்டரி மின்சக்தியை எடுத்துக்கொள்கின்றன.

எனவே தேவையில்லாத, பயன்படுத்தாத அப்ளிகேஷன்களின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் பெருமளவு பேட்டரி சக்தி வீணாவதை தடுத்துவிடலாம். 

இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு Smartphone Battery Saver மென்பொருள்கள் பயன்படும். 

பேட்டரியை சார்ஜ் செய்யும் முறை: 

லித்தியம் அயன் வகை பேட்டரிகளை 30 முதல் 40 சதவிகிதம் பேட்டரி உள்ளபோதே சார்ஜ் செய்வது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உதவும். 

லித்தியம் பாலமர் வகை பேட்டரிகளை பேட்டரி முழுவதும் தீர்ந்த பிறகு சார்ஜ் செய்வது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உதவும். 

எந்த பேட்டரியாக இருப்பினும், அதற்கான சார்ஜரைப் பயன்படுத்துவதே நல்லது. ஸ்மார்ட் போனுடன் உங்களுக்கு கொடுத்திருக்கும் பேட்டரியின் மூலம் சார்ஜ் செய்வதே நல்ல பலனைக் கொடுக்கும். சார்ஜரில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக புதிய ஒரிஜினல் சார்ஜரையே வாங்கி உபயோகிக்கவும். 

விலை குறைவாக கிடைக்கும் சாதாரண சார்ஜரை வாங்கிப் பயன்படுத்துவது என்பது பேட்டரிக்கும் பாதுகாப்பினைத் தராது.. உங்கள் ஸ்மார்ட் போனிற்கும் பாதுகாப்பில்லை. 

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 






Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top