நாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய
வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை
ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms
Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை
வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட
மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும்.
இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற
மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
§ நினைத்த பகுதியை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி.
§ நீங்கள் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட் நேரடியாக Ms office மென்பொருட்களில் கொண்டு வரும் சூப்பர் வசதி.
§ எடுக்கும் ஸ்க்ரீன் ஷாட்களை நேரடியாக இணையத்தில் அப்லோட் செய்து அதன் வெப் URL காணும் வசதி.
§ ஸ்க்ரீன்ஷாட்டை நேரடியாக சமூக தளங்களான ட்விட்டர்,பேஸ்புக்
தளத்திற்கு தரவேற்றும் வசதி.
§ பக்கங்களை zoom செய்யும் வசதி.
§ இணையத்தில் நீங்கள் நினைக்கும் நிறத்தை பயன்படுத்தி கொள்ளும் Color Picker வசதி.
§ நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் திரையிலேயே அப்படியே எழுதும் Whiteboard வசதி.
§ உருவாக்கும் ஸ்க்ரீன்ஷாட்டிர்க்கு பிரேம் போடும் வசதி. இன்னும்
ஏராளமான வசதிகள் இதில் உள்ளன.
உபயோகிக்கும் முறை
§ முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள்
கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
§ இன்ஸ்டால் செய்து கொண்டதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து
கொள்ளுங்கள்.
§ இப்பொழுது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான ஐக்கான்
வந்திருக்கும்.
§ இப்பொழுது நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவேண்டிய பக்கத்தை திறந்து
கொள்ளுங்கள்.
§ திறந்து கொண்டு உங்கள் கணினியில் டாஸ்க் பாரில் உள்ள picpick ஐக்கானை க்ளிக்
செய்து அதில் Screen Capture சென்று அடுத்து உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து
கொள்ளுங்கள்.
§ இல்லையேல் நம் கீபோர்டில் உள்ள Print Screen பட்டனை அழுத்தினால்
அந்த பக்கம் முழுவதும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாம்.
§ இது போல் கொடுத்தவுடன் அடுத்து உங்களுடைய ஸ்க்ரீன்ஷாட் நேராக இந்த
மென்பொருளில் வந்திருக்கும் இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து பின்னர்
மேலே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி ஸ்க்ரீன்ஷாட்டை சேமித்து கொள்ளுங்கள்.
இது போன்று வித்தியாச வித்தியாசமாக நாம் ஸ்க்ரீன் ஷாட் உருவாக்கி
கொள்ளலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.