டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.

லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் பயன்படுத்தும் வழிகளைச் செம்மைப் படுத்தும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.

நீங்கள் பேட்டரி பவரில் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், எந்த அளவிற்கு கம்ப்யூட்டரின் ப்ராசசர் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு, பேட்டரியின் மின் சக்தி விரைவில் தீர்ந்துவிடும் என்பதனை உணர்ந்திருப்பீர்கள். அதற்காக, நாம் லேப்டாப்பில் மேற்கொள்ளும் பணிகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில், நாம் விண்டோஸ் சிஸ்டத்திடம், ப்ராசசரின் செயல்பாட்டின் தீவிரத்தினை எந்த அளவிற்கு அனுமதிக்கலாம் என்பதனை செட் செய்திடலாம். இது கம்ப்யூட்டர் செயல்பாட்டின் வேகத்தினைச் சற்றுக் குறைக்கலாம். எனவே, முதலில் சோதனை அடிப்படையில், இதனை முதலில் பார்க்கலாம்


முதலில், லேப்டாப் கம்ப்யூட்டரை மின்சார இணைப்பிலிருந்து நீக்கவும். ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, power options என டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் விண்டோவில், current plan அடுத்து, 'Change plan settings' என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து 'Change advanced power settings' என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், 'Processor power management என்பது வரை கீழாகச் செல்லவும். இந்த ஆப்ஷனை விரித்து, Maximum processor state' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும். இங்கு எப்போதும் 100% என்ற நிலையில் இருக்கும். இதனைக் குறைத்து அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் அமைத்தது சரியாக வரவில்லை என்றால், அதன் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் முழுமையாக இல்லை எனில், பவர் ஆப்ஷன்ஸ் விண்டோவிற்கு மீண்டும் சென்று, மாறா நிலைக்கு மாற்றும்படி தேர்ந்தெடுத்து அமைக்கவும்.




Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top